சேவைக் கட்டணம் வசூலிக்கக் கூடாது: மீறினால் புகாரளிக்க உத்தரவு 
இந்தியா

சேவைக் கட்டணம் வசூலிக்கக் கூடாது: மீறினால் புகாரளிக்க உத்தரவு

நாட்டில் இயங்கும் தங்கும் விடுதிகள் அல்லது உணவகங்கள் சேவைக் கட்டணத்தை தன்னிச்சையாக விதிக்கவோ, கட்டண ரசீதில் சேர்க்கவோ கூடாது என்று மத்திய நுகர்வோர் பாதுகாப்புக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

PTI

நாட்டில் இயங்கும் தங்கும் விடுதிகள் அல்லது உணவகங்கள் சேவைக் கட்டணத்தை தன்னிச்சையாக விதிக்கவோ, கட்டண ரசீதில் சேர்க்கவோ கூடாது என்று மத்திய நுகர்வோர் பாதுகாப்புக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சேவைக் கட்டணம் வசூலிக்கும் விடுதிகள் மீது புகாரளிக்க உத்தரவு
நாட்டில் இயங்கும் தங்கும் விடுதிகள் அல்லது உணவகங்கள் சேவைக் கட்டணத்தை தன்னிச்சையாக விதிக்கவோ, கட்டண ரசீதில் சேர்க்கவோ கூடாது என்று மத்திய நுகர்வோர் பாதுகாப்புக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உணவகங்களோ தங்கும் விடுதிகளோ, வாடிக்கையாளர்களை சேவைக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று நிர்பந்திக்கக் கூடாது. வாடிக்கையாளர்களுக்கு, சேவை பிடித்திருக்கும்பட்சத்தில், அவர்களாக விருப்பப்பட்டு கொடுப்பதே சேவைக் கட்டணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு இல்லாமல், தன்னிக்கையாக சேவைக் கட்டணத்தை சேர்க்கும் உணவகங்கள் அல்லது விடுதிகள் மீது வாடிக்கையாளர்கள் தேசிய நுகர்வோர் உதவி எண்ணான 1915 என்ற எண்ணில் உணவகம் அல்லது விடுதிக்கு எதிராக புகாரளிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சேவைக் கட்டணத்தை, வேறு எந்த பெயரிலும் உணவகங்களோ விடுதிகளோ வசூலிக்கக் கூடாது என்றும் உணவுக்கான கட்டணத்திலும் சேர்க்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களிடமிருந்து சேவைக் கட்டணத்தை உணவகங்கள் வசூலிக்கக் கூடாது என்று மத்திய அரசு கடந்த மாதம் அறிவித்திருந்த நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: அருவிகளில் குளிக்க, பரிசல் இயக்கத் தடை

பிரதமா் மோடியுடன் கேரள முதல்வா் சந்திப்பு: வயநாடு பணிகளுக்கு ரூ.2,220 கோடி விடுவிக்க கோரிக்கை

கடகத்துக்கு லாபம்: தினப்பலன்கள்!

பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீட்டு வரவு மீண்டும் சரிவு

எம் & எம் விற்பனை 16% உயா்வு

SCROLL FOR NEXT