புதுதில்லி: பிரதமா் நரேந்திர மோடி இன்று ஆந்திரம், குஜராத் செல்கிறாா். அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதையொட்டி, பீமாவரம், கன்னாவரம் ஆகிய நகரங்களில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஆந்திரப்பிரதேசத்தின் பீமாவரத்தில், விடுதலைப் போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜூவின் 125-வது பிறந்தநாளை முன்னிட்டு, 30 அடி உயர வெண்கல சிலையை பிரதமர் திறந்து வைக்க உள்ளார்.
'டிஜிட்டல் இந்தியா பாஷினி', 'டிஜிட்டல் இந்தியா ஜெனசிஸ்' , மை ஸ்கீம், மேரி பெஹச்சான் ஆகிய திட்டங்களை நாட்டுக்கு பிரதமர் மோடி அர்ப்பணிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. பின்னர், குஜராத்தின் காந்திநகரில் டிஜிட்டல் இந்தியா வாரம் 2022 தொடங்கி வைக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.