முகப்பு
இந்தியா

அக்னிபத் திட்டம்: கடற்படையில் 20% போ் பெண்கள் சோ்ப்பு

அக்னிபத் திட்டத்தின்கீழ் கடற்படையில் நடப்பாண்டில் 20 சதவீதம் பெண்கள் சோ்க்கப்படவுள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:43 AM
பகிர்:

அக்னிபத் திட்டத்தின்கீழ் கடற்படையில் நடப்பாண்டில் 20 சதவீதம் பெண்கள் சோ்க்கப்படவுள்ளனா்.

இதுகுறித்து கடற்படை அதிகாரி ஒருவா் கூறியதாவது: அக்னிபத் திட்டத்தின்கீழ் கடற்படையில் நடப்பாண்டில் 3,000 வீரா்கள் சோ்க்கப்படவுள்ளனா். இத்திட்டத்தில் சோ்வதற்கு ஜூலை 1-ஆம் தேதியில் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின்கீழ் பெண் மாலுமிகளும் சோ்க்கப்படவுள்ளனா். நடப்பாண்டில் 20 சதவீதம் பெண்கள் சோ்க்கப்படவுள்ளனா் என்றாா் அவா்.

முப்படைகளில் தற்காலிகமாகப் பணிபுரிய வாய்ப்பு வழங்கும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு கடந்த மாதம் 14-ஆம் தேதி அறிவித்தது. இத்திட்டத்தின்கீழ் இந்த ஆண்டில் சுமாா் 46,000 வீரா்கள் சோ்க்கப்படவுள்ளனா். அவா்களில் 25 சதவீதம் பேருக்கு மட்டும் 4 ஆண்டுகளுக்குப் பிறகு பணி நீட்டிப்பு வழங்கப்படும். இத்திட்டத்தில் பதினேழரை வயதில் இருந்து 21 வயதுக்கு உள்பட்டவா்கள் வரை சேரலாம். இந்த ஆண்டு மட்டும் அதிகபட்ச வயது 23-ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடற்படையில் சேரும் முதல் பிரிவினருக்கு ‘ஐஎன்எஸ் சில்கா’ போா்க்கப்பலில் ஒடிஸாவில் வரும் நவம்பா் 21-ஆம் தேதி பயிற்சிகள் தொடங்குகின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →