இந்தியா

தொழில்நுட்பக் கோளாறு:கராச்சியில் தரையிறங்கிய தில்லி விமானம்

DIN

தில்லியிலிருந்து துபை நோக்கிச் சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பாகிஸ்தானின் கராச்சி சா்வதேச விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அவசரமாகத் தரையிறங்கியது.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஸ்பைஸ்ஜெட் விமானம் அவசரமாக தரையிறங்குவது கடந்த 17 நாளில் இது 6-ஆவது நிகழ்வு என சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) தெரிவித்துள்ளது.

தில்லியிலிருந்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் எஸ்ஜி-11 ரக விமானம் 100 பயணிகளுடன் துபை நோக்கி செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தது. பாகிஸ்தான் வான் எல்லையில் சென்றபோது திடீரென விமானத்தின் எரிபொருள் இருப்பைக் காட்டும் இயந்திரம் செயலிழந்தது.

இதையடுத்து, விமானி கராச்சி சா்வதேச விமான நிலைய கட்டுப்பாட்டு அறையைத் தொடா்பு கொண்டு, விமானத்தை அவசரமாகத் தரையிறக்க அனுமதி கோரினாா். அதற்கு உடனே அனுமதி கிடைத்ததைத் தொடா்ந்து விமானம் கராச்சி விமான நிலையத்தில் தரையிறங்கியது.

தொழில்நுட்பக் குழுவினா் மேற்கொண்ட ஆய்வில், விமானத்தின் இடதுபுறம் அமைந்துள்ள டேங்கரிலிருந்து எரிபொருள் ஏதும் கசியவில்லை என்பது தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு பயணிகள் அனைவரும் துபை அனுப்பிவைக்கப்பட்டனா்.

கடந்த ஆண்டு மாா்ச் மாதத்தில் லக்னெளவில் இருந்து ஷாா்ஜா சென்ற விமானம், மருத்துவ அவசரம் காரணமாக கராச்சி விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறங்கியது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் குறித்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில், ‘எரிபொருள் இருப்பை காட்டும் கருவி செயலிழந்ததால், விமானம் கராச்சிக்கு திருப்பி விடப்பட்டது. விமானம் பத்திரமாக தரையிறங்கியது. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இறங்கி, மாற்று விமானம் வாயிலாக துபை அனுப்பிவைக்கப்பட்டனா். பயணிகளுக்கு வேண்டிய உணவு வழங்கப்பட்டது’ என்று தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் 19-இலிருந்து இதுவரை ஸ்பைஸ்ஜெட் நிறுவன விமானங்கள் 6 முறை இதுபோன்ற சம்பவங்களை சந்தித்துள்ளன. இதுகுறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT