முகப்பு
இந்தியா

இரண்டாவது திருமணம் செய்யப்போகும் மாநில முதல்வர் யார் தெரியுமா?

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், இரண்டாவது திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார். 

Updated On : 6 ஜூலை, 2022 at 6:00 PM
இரண்டாவது திருமணம் செய்யப்போகும் மாநில முதல்வர் யார் தெரியுமா?
பகிர்:


சண்டிகர்; பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், இரண்டாவது திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார். 

வியாக்கிழமை நடைபெறவிருக்கும் எளிய நிகழ்ச்சியில், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உள்பட ஆம் ஆத்மி தலைவர்கள்  பலரும் இதில் பங்கேற்கவிருக்கின்றனர்.

பகவந்த் மான், நாளை குர்பிரீத் கௌர் என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார். அவர் மருத்துவராக பணியாற்றுகிறார். 48 வயதாகும் பகவந்த் மான், சுமார் 30 வயதாகும் குர்பிரீத் கௌரை நாளை மணக்கவிருக்கிறார்.

Advertisement

பகவந்த் மானின் முதல் திருமணம் இந்தர்ப்ரீத் கௌருடன் நடைபெற்றது. அது 2016ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது. இந்த தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள். மகள் தில்ஷான் மற்றும் மகள் சீரத் இருவரும் தனது தாயுடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார்கள்.

கடந்த மார்ச் 16ஆம் தேதி நடைபெற்ற பஞ்சாப் முதல்வராக பகவந்த் மான் பதவியேற்பு விழாவில் இருவரும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.