திரௌபதி முர்மு 
இந்தியா

திரௌபதி முர்மு குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு காரணம் இதுதானா?

குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டதற்கு வாக்கு வங்கிதான் காரணம் என சமூக ஆர்வலர் மேதா பட்கர் தெரிவித்துள்ளார்.

DIN

குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டதற்கு வாக்கு வங்கிதான் காரணம் என சமூக ஆர்வலர் மேதா பட்கர் தெரிவித்துள்ளார்.

பாஜக வாக்கு வங்கியை மையப்படுத்தியே திரௌபதி முர்முவை தங்களது குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்துள்ளது. அவர்களுக்கு பழங்குடியினரின் நலனில் எல்லாம் அக்கறை கிடையாது என மேதா பட்கர் தெரிவித்துள்ளார்.

தனது சொந்த கிராமத்தில் மின் இணைப்பு கொடுக்க முடியாத திரௌபதி முர்மு ஒருபுறமும், மற்றொரு பக்கத்தில் எதிர்க்கட்சிகளின் சார்பில் போட்டியிடும் பொருளாதார நிபுணர் யஷ்வந்த் சின்ஹா என இருவருமே ஆளுங்கட்சியின் திட்டங்களுக்கு கையெழுத்திடும் பதவிக்கு தான் போட்டியிடுகிறார்கள். இவர்களுக்கு இடையேயான இந்த போட்டி எனக்கு ஆச்சர்யத்தை தான் ஏற்படுத்துகிறது என மேதா பட்கர் தெரிவித்தார்.

இது குறித்து சமூக ஆர்வலர் மேதா பட்கர் கூறியதாவது: “ அவர்கள் (பாஜக) எதற்காக பழங்குடியினப் பெண்ணை குடியரசுத் தலைவராக நிறுத்த வேண்டும். அதேபோல பிர்சா முண்டா ஜெயந்தி விழாவை அவர்கள் கொண்டாடுகிறார்கள். அதற்கு காரணம் மத்திய பிரதேசம் மற்றும் சில மாநிலங்களில் பழங்குடியின மக்களின் வாக்கு வங்கி அதிகம். அதன் காரணத்தினாலேயே இவ்வாறு செயல்படுகிறார்களே தவிர உண்மையின் பழங்குடியின மக்களின் நலனுக்காக அவர்கள் செயல்படவில்லை.

மத்திய பிரதேசத்தின் போபாலில் பிரதமர் நரேந்திர மோடி பிர்சா முண்டா ஜெயந்தியில் பங்கெடுத்ததற்குக் காரணமும் வாக்கு வங்கிதான். உண்மையில், பழங்குடியின மக்களின் நலனுக்காக செயல்படுபவர்கள் அவர்களது உரிமைகளை பாதுகாக்க வேண்டும். திரௌபதி முர்மு குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவரால் பழங்குடியின மக்களின் நலனுக்காக என்ன செய்ய முடியும் என்பது தெரியவில்லை. அவருக்கு அதிகாரம் இருக்கின்ற போதிலும் அவர் ஆளுங்கட்சியின் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குபவர் மட்டுமே என்பது தான் உண்மை. ” எனக் கூறியுள்ளார்.

குடியரசுத் தலைவர் பதவிக்கானத் தேர்தல் வருகிற ஜூலை 18ஆம் தேதி நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

SCROLL FOR NEXT