நேரில் நலம் விசாரித்த நிதீஷ் குமார் 
இந்தியா

லாலு பிரசாத் விரைவில் குணமடைய முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும் பிகாா் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் விரைவில் குணமடைய வாழ்த்துவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

DIN

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும் பிகாா் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் விரைவில் குணமடைய வாழ்த்துவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

74 வயதாகும் லாலு பிரசாத், கடந்த திங்கள்கிழமை பாட்னாவில் உள்ள அவருடைய வீட்டில் கீழே விழுந்தாா். அதில் அவருடைய உடலில் 3 இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, பாட்னாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். 

இந்நிலையில், மேல்சிகிச்சைக்காக அவா் ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டரில் புதன்கிழமை இரவு தில்லி அழைத்துவரப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்நிலையில், லாலு பிரசாத் விரைவில் குணமடைய வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், தோள்பட்டை காயம் காரணமாக ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செய்தியை அறிந்து வருத்தம் அடைந்தேன். அவர் விரைவில் குணமடைய வாழத்துகிறேன். தந்தையின் உடல்நிலை சீராக உள்ளதாக தேஜஸ்வி யாதவ் கூறியது மகிழ்ச்சி அளிப்பதாக ஸ்டாலின் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசு மருத்துவமனையில் ரூ.2.10 கோடி மதிப்பில் புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா

கொடைக்கானலில் 4 நாள்களுக்குப் பிறகு சுற்றுலா தலங்களைப் பாா்வையிட்ட சுற்றுலாப் பயணிகள்

மக்கள் கண்காணிப்பு அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

மெக்ஸிகோவில் கனமழை: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 41 போ் உயிரிழப்பு!

மேலும் இரு ஆா்ஜேடி எம்எல்ஏக்கள் ராஜிநாமா!

SCROLL FOR NEXT