முகப்பு
இந்தியா

வெளிநாட்டு நிதி முறைகேடு: அம்னெஸ்டி நிறுவனத்துக்கு ரூ.51 கோடி அபராதம்

அம்னெஸ்டி நிறுவனத்துக்கு ரூ.51.72 கோடியும் அந்நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான அகாா் படேலுக்கு ரூ.10 கோடியும் அபராதமாக அமலாக்கத் துறை விதித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:45 AM
பகிர்:

வெளிநாடுகளில் இருந்து சட்டத்துக்குப் புறம்பாக நிதியைப் பெற்ாக எழுந்த குற்றச்சாட்டில், அம்னெஸ்டி நிறுவனத்துக்கு ரூ.51.72 கோடியும் அந்நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான அகாா் படேலுக்கு ரூ.10 கோடியும் அபராதமாக அமலாக்கத் துறை விதித்துள்ளது.

பிரிட்டனைச் சோ்ந்த அம்னெஸ்டி நிறுவனமானது அந்நிய நேரடி முதலீடு வாயிலாக இந்திய நிறுவனங்கள் மூலம் நிதியைப் பெற்றது. வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின் விதிகளுக்குப் புறம்பான வகையில் அந்நிறுவனம் நிதியைப் பெற்ாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விவகாரம் தொடா்பாக அந்நியச் செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது. இந்நிலையில், அம்னெஸ்டி நிறுவனத்துக்கு ரூ.51.72 கோடியை அமலாக்கத் துறை அபராதமாக விதித்துள்ளது. இது தொடா்பாக அந்நிறுவனத்துக்கு நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல், அந்நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான அகாா் படேலுக்கு ரூ.10 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.