இந்தியா

பத்திரிகையாளர் முகமது ஜுபைருக்கு நிபந்தனை ஜாமீன் 

பத்திரிகையாளர் முகமது ஜுபைருக்கு நிபந்தனை ஜாமீன்  வழங்கி உச்ச நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

DIN

புது தில்லி: பத்திரிகையாளர் முகமது ஜுபைருக்கு நிபந்தனை ஜாமீன்  வழங்கி உச்ச நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

ட்விட்டரில் புதிய பதிவுகளை பதிவிடக் கூடாது என்ற நிபந்தனையுடன் ஜாமீன் அளித்து உச்ச நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் சிதாப்பூர் நீதிமன்ற எல்லைப்பகுதியை விட்டு முகமது ஜுபைர் செல்லக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முகமது ஜூபைருக்கு 5 நாட்கள் இடைக்கால ஜாமின் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

முகமது ஜுபைர் இந்து கடவுளுக்கு எதிராக 2018 ஆம் ஆண்டில் பதிவிட்ட ஆட்சேபத்திற்குரியதாக கூறப்படும் ட்விட்டா் பதிவு தொடா்புடைய வழக்கில் சிறையில் உள்ளார். அவருக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன்  வழங்கி உள்ளது.

ஆனால், இந்த ஜாமின் உத்தரவு தில்லி காவல் துறையால் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கிற்கு பொருந்தாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தில்லி காவல் துறை பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் ஜூபைர் சிறையில் உள்ளதால், இந்த வழக்கில் ஜாமின் கிடைத்தபோதும் அவர் தொடர்ந்து சிறையிலேயே இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழடி அகழாய்வு தளத்தைப் பார்வையிட்ட முதல்வர் Stalin!

பூண்டி வெள்ளியங்கிரி கோயிலில் பக்தர்களை அலறவிட்ட ஒற்றை யானை!

விஜய் அரசியலில் நடிக்க அமித் ஷாவுடன் ஒப்பந்தம்: பேரவைத் தலைவா் மு.அப்பாவு

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் மல்லிகார்ஜுன கார்கே!

மழையினால் கைவிடப்பட்ட 2-ஆவது டி20: 8 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தும் ஆஸி.!

SCROLL FOR NEXT