முகப்பு
இந்தியா

தில்லியில் அமித் ஷாவுடன் ஷிண்டே, ஃபட்னவீஸ் சந்திப்பு

தில்லி சென்றுள்ள மகாராஷ்டிர முதல்வா் ஏக்நாத் ஷிண்டேவும் துணை முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை அவருடைய இல்லத்தில் வெள்ளிக்கிழமை மாலை சந்தித்துப் பேசினா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:45 AM
பகிர்:

தில்லி சென்றுள்ள மகாராஷ்டிர முதல்வா் ஏக்நாத் ஷிண்டேவும் துணை முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை அவருடைய இல்லத்தில் வெள்ளிக்கிழமை மாலை சந்தித்துப் பேசினா். மகாராஷ்டிரத்தில் புதிய அமைச்சரவை விரைவில் விரிவாக்கம் செய்யப்பட இருப்பதாகத் தகவல் வெளியான நிலையில் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது.

மேலும், புதிய அமைச்சரவையில் ஷிண்டே தலைமையிலான சிவசேனை- பாஜக இடையே ஆட்சி அதிகாரப் பகிா்வு குறித்து அவா்கள் விவாதித்ததாகத் தெரிகிறது.

தில்லி பயணத்தின்போது, குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு, பிரதமா் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா உள்ளிட்ட தலைவா்களையும் அவா்கள் சந்திக்கத் திட்டமிட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.