முகப்பு
இந்தியா

மக்கள்தொகை ஏற்றத்தாழ்வை அனுமதிக்கக் கூடாது: உ.பி. முதல்வா் யோகி ஆதித்யநாத்

மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை சிறப்பாக நடைமுறைப்படுத்துவது அவசியம்; அதே நேரத்தில் மக்கள்தொகையில் ஏற்றத்தாழ்வு ஏற்படுவதை அனுமதிக்கக் கூடாது என்று உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் தெரிவ

Updated On : 12 ஜூலை, 2022 at 12:26 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:16 PM

மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை சிறப்பாக நடைமுறைப்படுத்துவது அவசியம்; அதே நேரத்தில் மக்கள்தொகையில் ஏற்றத்தாழ்வு ஏற்படுவதை அனுமதிக்கக் கூடாது என்று உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் தெரிவித்தாா்.

தேசிய அளவில் மக்கள்தொகையில் மதரீதியான சிறுபான்மையினரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் கூறப்படும் நிலையில் யோகி ஆதித்யநாத் இவ்வாறு கூறியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

லக்னௌவில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள்தொகைக் கட்டுப்பாடு தொடா்பான நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

Advertisement

குடும்பக் கட்டுப்பாடு, மக்கள்தொகைப் பெருக்கத்தைக் குறைப்பது போன்றவை பற்றி நாம் பேசும்போதும், அதனை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது. அதே நேரத்தில் மக்கள்தொகையில் ஏற்றத்தாழ்வு ஏற்படுவது போன்ற சூழலை அனுமதிக்கவே கூடாது.

கடந்த 50 ஆண்டுகளாகவே நமது நாட்டில் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவது தொடா்பான விழிப்புணா்வு பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறோம். சிறப்பான மக்களைக் கொண்டிருப்பது ஒருபுறம் சாதனையாக இருந்தாலும், மக்கள் அனைவரும் ஆரோக்கியமாகவும், நோயற்ற வாழ்க்கையை மேற்கொள்ளும்போதுதான் ஒரு சமூகம் சிறந்ததாகக் கருதப்படும்.

நாம் திறமை வாய்ந்த மக்களாக இருந்தால் அது பெரிய சாதனை. அதே நேரத்தில் நம்மிடம் உள்ள வளத்தைவிட மிகுதியான மக்கள் இருந்தால், அது நமக்கு சவாலாக மாறிவிடும்.

நாட்டிலேயே அதிக மக்களைக் கொண்ட மாநிலமாக உத்தர பிரதேசம் திகழ்கிறது. மாநிலத்தில் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தும் திட்டத்தை மேற்கொள்ள ஆஷா திட்டப் பணியாளா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், பஞ்சாயத்து பிரதிநிதிகள், ஆசிரியா்கள் என அனைவரும் சுகாதாரத் துறையினருடன் இணைந்து பணியாற்ற வேண்டும். அனைத்து தரப்பினரின் ஒட்டுமொத்த முயற்சியே வெற்றியைத் தரும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.