இந்தியா

அமர்நாத்: ஆந்திரத்தைச் சேர்ந்த 39 பேர் மீட்பு, 13 பேர் மாயம்

நான்கு நாள்களுக்கு முன்பு அமர்நாத்தில் ஏற்பட்ட மேகவெடிப்பு மற்றும் திடீர் வெள்ளத்தில் சிக்கிய ஆந்திரத்தைச் சேர்ந்த சுமார் 39 பயணிகள் கண்டுபிடிக்கப்பட்டுப் பாதுகாப்பாக இருப்பதாக மாநில அரசு தெரிவித்துள்

PTI

நான்கு நாள்களுக்கு முன்பு அமர்நாத்தில் ஏற்பட்ட மேகவெடிப்பு மற்றும் திடீர் வெள்ளத்தில் சிக்கிய ஆந்திரத்தைச் சேர்ந்த சுமார் 39 பயணிகள் கண்டுபிடிக்கப்பட்டுப் பாதுகாப்பாக இருப்பதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. 

ஆனால், ராஜமகேந்திரவரத்தைச் சேர்ந்த 2 பெண்களும், நெல்லூரைச் சேர்ந்த 11 பேர் கொண்ட குழுவும் காணவில்லை என்று மாநில அரசு வெளியிட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஞாயிற்றுக்கிழமை காணாமல் போனதாகக் கூறப்பட்ட நெல்லையைச் சேர்ந்த 18 பேர் கொண்ட மற்றொரு குழு கண்டுபிடிக்கப்பட்டது.

ஜம்மு-காஷ்மீரில் காணாமல் போன பயணிகளைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. 

வருவாய் அதிகாரிகள், காணாமல் போன குடும்பத்தினரைத் தொடர்ந்து தொடர்புகொண்டு வருவதாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

புது தில்லியில் உள்ள ஆந்திரப் பிரதேச பவன் அதிகாரிகள் பயணிகளைப் பாதுகாப்பாக அந்தந்த இடங்களுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர் என்று அந்த அதிகாரி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

ஹரியாணாவில் மிதமான நிலநடுக்கம்

”நெல்லைக்கென 3 Special அறிவிப்புகள்! சொல்லவா?” முதல்வர் மு.க. ஸ்டாலின்

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரைச் சேர்க்க... 12 ஆவணங்கள் எவை?

SCROLL FOR NEXT