இந்தியா

பால்டால் வழியாக அமர்நாத் யாத்திரை செல்ல மீண்டும் அனுமதி

PTI

பால்டால் பாதை வழியாக அமர்நாத் யாத்திரை செல்ல இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

ஜம்மு-காஷ்மீரின் அமர்நாத் அருகே ஜூலை 8-ம் தேதி ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமான 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் மாயமாகியுள்ளனர். இதனால் அமர்நாத் யாத்திரை, தொடர்ந்து நான்கு நாள்களாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. 

இந்நிலையில், தற்போது நிலைமை சீரடைந்ததையடுத்து, கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள பால்டால் மார்க்கத்திலிருந்து குகைக் கோயிலுக்குச் செல்ல இன்று முதல் அனுமதி அளிக்கப்படுகிறது. 

திங்களன்று பஹல்காம் பாதை வழியாக யாத்திரை மீண்டும் தொடங்கியது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT