இந்தியா

அக்னிபத் திட்டத்திற்கு எதிரான வழக்குகள்: ஜூலை 15-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

DIN

புதுதில்லி: அக்னிபத் திட்டத்திற்கு எதிராக தொடரப்பட்டுள்ள அனைத்து பொதுநல  வழக்குகள் அனைத்தும் ஜூலை 15-ம் தேதி விசாரணைக்கு வரும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

மத்திய அரசு அறிவித்துள்ள அக்னிபத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சியினர், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சில இடங்களில் போராட்டம் கலவரமாகவும் மாறியுள்ளது.

இந்நிலையில், பல்வேறு தரப்பினர் அக்னிபத் திட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, அக்னிபத் திட்டத்திற்கு எதிராக தொடரப்பட்டிருக்கும் அனைத்து வழக்குகளும் ஜூலை 15-ம் தேதி உரிய அமர்வு முன்பு விசாரிக்க உள்ளதாக உச்ச நீதிமன்றம்  தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை-இலங்கை கப்பல் சேவை: மே 17-ஆம் தேதிக்கு மாற்றம்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை யாரும் ரத்து செய்ய முடியாது: பிரதமர் மோடி

‘தி தோல்’ சரும கிளினிக்கில் நவீன கருவி அறிமுகம்

கல்வி எங்கே போகிறது?

இயல்பாக இயங்கட்டும் இளையோா்

SCROLL FOR NEXT