இந்தியா

நாட்டில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா... புதிதாக 20,139 பேருக்கு தொற்று

நாட்டில் புதன்கிழமை கரோனா பாதிப்பு 16,906 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 20,139 ஆக அதிகரித்துள்ளது. 38 பேர் உயிரிழந்துள்ளனர். 

DIN

நாட்டில் புதன்கிழமை கரோனா பாதிப்பு 16,906 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 20,139 ஆக அதிகரித்துள்ளது. 38 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

புதன்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 16,906 பேருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, மேலும் புதிதாக 20,139 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 4,36,89,986-ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,36,076 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.31 சதவீதமாக உள்ளது. நாள்தோறும் பாதிப்பு விகிதம் 5,10 சதவீதமாக உள்ளது.

தொற்று பாதித்தவர்களில் புதிதாக 38 பேர் இறந்துள்ளனர். இதனால் தொற்றுக்கு இறந்தோரின் எண்ணிக்கை 5,25,557 ஆக அதிகரித்துள்ளது. இறந்தோரின் விகிதம் 1.20 சதவீதமாக உள்ளது.

கரோனாவில் இருந்து 16,482 போ் குணமடைந்துள்ளனா். இதனால் இதுவரை குணமடைந்தவா்கள் எண்ணிக்கை 4,30,28,356-ஆக அதிகரித்துள்ளது என்று குணமடைந்தோர் விகிதம் 98.49 சதவீதமாக உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 1,99,27,27,559 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. புதன்கிழமை மட்டும் 13,44,714 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சட்டவிரோத குடியேற்றம்: தில்லியில் 5 வங்கதேசத்தினர் கைது!

கையில் பணமில்லை.. நடைபாதையில் படுத்துறங்கிய மென்பொருள் நிறுவன ஊழியர்!

திமுக ஆட்சியில் நிறையும் இருக்கு, குறையும் இருக்கு!பவர்கட் பிரச்னைக்கு தீர்வில்லை!-பிரேமலதா விஜயகாந்த்

சத்ரபதி சிவாஜி குறித்த புதிய படம்.. தடை செய்ய ஹிந்துத்துவ அமைப்பு வலியுறுத்தல்! ஏன்?

கடைசி நாளில் இங்கிலாந்து அணி பயந்துவிட்டது: இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

SCROLL FOR NEXT