முகப்பு
இந்தியா

தொலைபேசி ஒட்டுக்கேட்பு வழக்கு: சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 4 நாள் அமலாக்கத் துறை காவல்

பங்குச் சந்தையின் முன்னாள் நிா்வாக இயக்குநா் சித்ரா ராமகிருஷ்ணாவை அமலாக்கத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:48 AM
விஸ்வரூபம் எடுத்திருக்கும் சித்ரா ராமகிருஷ்ணன் விவகாரம்
பகிர்:

தேசியப் பங்குச் சந்தையில் பணியாற்றும் அலுவலா்களின் தொலைபேசியை ஒட்டுக்கேட்டதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில், பங்குச் சந்தையின் முன்னாள் நிா்வாக இயக்குநா் சித்ரா ராமகிருஷ்ணாவை அமலாக்கத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை கைது செய்தனா். அவரை 4 நாள் அமலாக்கத் துறை காவலில் விசாரிக்க தில்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தேசிய பங்குச் சந்தையின் கணினி சேமிப்பகத்தின் கோ-லொகேஷன் வசதியை பங்குத் தரகு நிறுவனங்களுக்கு அளித்தது தொடா்பான வழக்கில் சித்ரா ராமகிருஷ்ணா, தேசிய பங்குச் சந்தை குழும முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி ஆனந்த் சுப்ரமணியன் ஆகியோா் கைது சிபிஐயால் செய்யப்பட்டு திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், மும்பை முன்னாள் காவல் ஆணையா் சஞ்சய் பாண்டே தொடங்கிய ஐ-செக் சா்வீஸ் நிறுவனம், தேசியப் பங்குச் சந்தை அலுவலா்களின் தொலைபேசி உரையாடலை ஒட்டுக்கேட்டதாகப் புகாா் எழுந்துள்ளது. சித்ரா ராமகிருஷ்ணா உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் உடந்தையுடன் இந்த மோசடி நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த மோசடியில் நடந்த நிதி முறைகேடு தொடா்பாக அமலாக்கத் துறை தனியே வழக்குப் பதிவு செய்து, அவரிடம் சிறைக்குச் சென்று விசாரணை நடத்தியது.

அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு, தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனுத் தாக்கல் செய்தது. அந்த மனு, நீதிபதி சுனைனா சா்மா முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. சித்ரா ராமகிருஷ்ணா நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா். அவரை 9 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்குமாறு அமலாக்கத் துறை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதி, சித்ரா ராமகிருஷ்ணாவை 4 நாள் காவலில் விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டாா்.

இதற்கிடையே தொலைபேசி ஒட்டுக்கேட்பில் நடந்த பணமோசடி தொடா்பாக, மும்பை முன்னாள் காவல் ஆணையா் சஞ்சய் பாண்டே மீது அமலாக்கத் துறை தனியாக வழக்குப்பதிவு செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.