இந்தியா

ஏர் அரேபியா விமானம் கொச்சியில் அவசரமாக தரையிறக்கம்

சார்ஜாவில் இருந்து கேரளம் வந்த ஏர் அரேபியா விமானம் கொச்சி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

DIN

சார்ஜாவில் இருந்து கேரளம் வந்த ஏர் அரேபியா விமானம் கொச்சி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. 

சார்ஜாவில் இருந்து 222 பயணிகள், 7 பணியாளர்களுடன் கேரளம் வந்த ஏர் அரேபியா விமானம் கொச்சி விமான நிலையத்தில் இன்று மாலை அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஹைட்ராலிக் பழுது காரணமாக விமானத்தின் என்ஜின் ஆஃப் செய்யப்பட்டு பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. 

விமானத்தில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்று கொச்சி சர்வதேச விமான நிலையம் தெரிவித்துள்ளது. கொச்சியில் விமானம் தரையிறக்கப்பட்டு நிலைமை சீரானவுடன் இரவு 8.22 மணியளவில் முதல் இண்டிகோ விமானம் சென்னை புறப்பட்டுச் சென்றது.

இதனால் கொச்சி விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தம்மம்பட்டியிலிருந்து திருப்பதிக்கு அரசுப் பேருந்து இயக்கக் கோரிக்கை

சிங்காரப்பேட்டை கோயில் பூசாரி குடும்பத்துடன் தற்கொலை முயற்சி

கரூா் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த இருவரின் குடும்பத்துக்கு நிவாரணம்

குறைந்தபட்ச இருப்புக்கான கட்டணம்: ஐஓபி தள்ளுபடி

சங்கரன்கோவிலில் நாளை மின் நிறுத்தம்

SCROLL FOR NEXT