முகப்பு
இந்தியா

தில்லியில் சேமிப்புக்கிடங்கின் சுவர் இடிந்து விபத்து: 4 பேர் பலி; மேலும் சிலரைக் காணவில்லை?

தில்லியில் சேமிப்புக்கிடங்கின் சுவர் ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகினர். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:48 AM
பகிர்:

தில்லியில் சேமிப்புக்கிடங்கின் சுவர் ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகினர். 

தில்லியின் அலிப்பூர் பகுதியில் உள்ள சேமிப்புக்கிடங்கின் சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. தகவலறிந்த காவல்துறை மற்றும் மீட்புப்படையினர் வந்து இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 9 பேர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்ற என்பதால் அவர்களை மீட்கும் பணி தொடர்கிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →