இந்தியா

பாஜக கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக ஜகதீப் தன்கா் அறிவிப்பு

DIN

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக ஜகதீப் தன்கரை பாஜக தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்துள்ளார்.

குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பாரதிய ஜனதா கட்சி உள்பட பல முக்கிய கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவிக்காமல் இருந்து வந்தன. 

இந்நிலையில் தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற பாஜகவின் ஆட்சி மன்றக் குழுக் கூட்டத்தில் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக ஜகதீப் தன்கா் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கெனவே குடியரசுத் தலைவர் வேட்பாளராக பாஜக சார்பில் பழங்குடியினத்தைச் சேர்ந்த திரெளபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். குடியரசு துணைத் தலைவர் பொறுப்புக்கும் சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த முக்தார் அப்பாஸ் நக்வி தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் ஜகதீப் தன்கா் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜகதீப் தன்கர் மேற்குவங்க ஆளுநராக பணியாற்றி வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்து ஓட்டுநா் போக்சோவில் கைது

திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி

சுட்டெரிக்கும் வெயில்: கடற்கரையில் குவிந்த பொதுமக்கள்

முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி மரணம்

SCROLL FOR NEXT