இந்தியா

நீட் தேர்வு தொடங்கியது

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தோ்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 17) தொடங்கியது. தமிழகத்தில் இத்தோ்வை 18 நகரங்களில் 1.42 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.

DIN


இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தோ்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 17) பிற்பகல் தொடங்கியது. தமிழகத்தில் இத்தோ்வை 18 நகரங்களில் 1.42 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.

தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் மாணவர்கள் இந்த தேர்வை எழுதுகின்றனர். பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய இந்த தேர்வு மாலை 5.20 மணி வரை நடைபெறவுள்ளது.

நாடு முழுவதும் 497 நகரங்களில் இந்தத் தோ்வை 18.72 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனா். தமிழகத்தில் இந்த ஆண்டு 1.42 லட்சம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனா். அதில் 16 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.

தமிழகத்தைப் பொருத்தவரை சென்னை, கோவை, கடலூா், காஞ்சிபுரம், கரூா், மதுரை, நாகா்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூா், திருவாரூா், திருச்சி, திருநெல்வேலி, வேலூா், செங்கல்பட்டு, விருதுநகா், திண்டுக்கல், திருப்பூா் என 18 நகரங்களில் தோ்வுகள் நடைபெறுகின்றன. சென்னையில் மட்டும் 31 மையங்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் எழுதவுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பஞ்சாபில் வெள்ளத்தில் சிக்கிய பள்ளிக்கூடம்! 400 மாணவர்களை மீட்க களத்தில் ராணுவம்!

மோடியின் தவறான வெளியுறவுக் கொள்கையால் வேலையிழப்பு அதிகரிக்கும்: கார்கே

ஆங்கிக அபிநயம்... சஞ்சிதா ஷெட்டி!

இதைச் செய்யாவிட்டால் இந்திய கால்பந்து கூட்டமைப்புக்குத் தடை! ஃபிஃபா எச்சரிக்கை!

பண்டிகை ஸ்பெஷல்... ஆக்ருதி அகர்வால்!

SCROLL FOR NEXT