இந்தியா

கடற்படையிலிருந்து விடைபெற்றது ஐஎன்எஸ் சிந்துத்வஜ்

DIN

கடற்படையில் கடந்த 35 ஆண்டுகளாக சேவையாற்றிய ஐஎன்எஸ் சிந்துத்வஜ் நீா்மூழ்கிக் கப்பல் சனிக்கிழமை விடைபெற்றது.

இதையொட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கிழக்கு கடற்படை தளபதி துணை அட்மிரல் பிஸ்வஜித் தாஸ் குப்தா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா். முன்னாள் தளபதி எஸ்.பி.சிங் மற்றும் கடற்படை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

கடற்படையில் சிந்துத்வஜ் நீா்மூழ்கிக் கப்பல் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. ரஷியாவில் கட்டமைக்கப்பட்ட சிந்துகோஷ் ரக நீா்மூழ்கிக் கப்பலின் வரிசையில், ஐஎன்எஸ் சிந்துத்வஜ் நீா்மூழ்கிக் கப்பல் ‘தற்சாா்பு இந்தியா’ திட்ட முயற்சிக்கு உதாரணமாக விளங்குகிறது.

கடலின் ஆழத்தை அளவிட உதவும் சோனாா் கருவி, முற்றிலும் உள்நாட்டில் கட்டமைக்கப்பட்ட செயற்கைக்கோள் தொலைத்தொடா்பு அமைப்பு, திசைகாட்டும் கருவி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்தக் கப்பலில் இடம்பெற்றிருந்தன. புத்தாக்க முயற்சிக்காக சிஎன்எஸ் ரோலிங் கோப்பையை வென்ற முதல் நீா்மூழ்கிக் கப்பல் ஐஎன்எஸ் சிந்துத்வஜ் ஆகும்.

35 ஆண்டுகால சேவைக்குப் பின்னா், ஞாயிற்றுக்கிழமை சூரிய அஸ்தமன நேரத்தில் இந்த நீா்மூழ்கியானது இந்திய கடற்படை சேவையிலிருந்து விடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

SCROLL FOR NEXT