இந்தியா

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் குண்டுவெடிப்பு: ராணுவ அதிகாரிகள் இருவர் பலி

DIN

ஜம்மு-காஷ்மீரின், பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைப் பகுதியில் கையெறி குண்டு வெடித்ததில் ராணுவ தலைவர் மற்றும் ஜூனியர் கமிஷன் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர். 

ஞாயிற்றுக்கிழமை இரவு இந்திய ராணுவ வீரர்கள் மெந்தர் செக்டார் பகுதியில் பணியில் இருந்தபோது இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. 

இந்த குண்டுவெடிப்பில் கேப்டன் ஆனந்த் மற்றும் கேஜிஓ நைப் சுபேதார் பகவான் சிங் ஆகியோருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக உதம்பூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 

பிகாரின் பகல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சம்பா நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் கேப்டன் ஆனந்த், உத்தரப் பிரதேச மாநிலம் அம்பேத்கர் நகர் மாவட்டத்தில் உள்ள போகர் பிட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் நைப் சுபேதார் பகவான் சிங்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT