இந்தியா

ஜி.எஸ்.டி. வரி: மாநிலங்களவையில் முதல் நாளிலேயே அமளி; நாளைவரை ஒத்திவைப்பு

DIN

அரிசி, தயிர் உள்ளிட்ட பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாள் முழுவதும் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

நாடளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று காலை மாநிலங்களவையில் தொடங்கியது. ஆகஸ்ட் 12 வரை நடைபெறவுள்ள கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், இன்று காலை மாநிலங்களவை கூடியவுடன் புதிதாக தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, அவையின் பிற அலுவல்கள் தொடங்கியவுடன், அரிசி, தயிர் உள்ளிட்ட பண்டல் பொருள்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 5 சதவிகித ஜி.எஸ்.டி. வரியை திரும்பப் பெறக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபடத் தொடங்கினர்.

மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் இருக்கைக்கு முன்பு நின்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கமிட்டதால் நாளை காலை 11 மணிவரை அவை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய்!

மார்க்சிஸ்ட் கம்யூ. எக்ஸ் பக்கம் முடக்கம்!

ஸ்ரீநகரில் பல்வேறு சமூக பிரதிநிதிகளுடன் அமித் ஷா சந்திப்பு

ராமர் என் பக்கம் என்கிறார் சமாஜ்வாதி வேட்பாளர்!

சென்னையில் இன்றும் மழை பெய்யும்!

SCROLL FOR NEXT