இந்தியா

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்: ஜகதீப் தன்கர் வேட்புமனுத் தாக்கல்

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் போட்டியிடும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஜகதீப் தன்கர் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

DIN

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் போட்டியிடும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஜகதீப் தன்கர் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

குடியரசு துணைத் தலைவராக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக் காலம் ஆகஸ்ட் 10-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அடுத்த குடியரசு துணைத் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் ஆகஸ்ட் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது.

ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக மேற்கு வங்க ஆளுநராக இருந்த ஜகதீப் தன்கர் அறிவிக்கப்பட்டார். அதேபோல், எதிா்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ராஜஸ்தான் மாநில முன்னாள் ஆளுநா் மாா்கரெட் ஆல்வா அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தில்லியில் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஜகதீப் தன்கர் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜூலை 19-ஆம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், ஜூலை 20-ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறும். ஜூலை 22-ஆம் தேதி வேட்புமனுவை திரும்பப் பெற கடைசி நாளாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாப் கியர்(ரா) மாடல்!

மாதத்துக்கு 4 நாள்கள் அசைவம், ரூ.540 தினக்கூலி! பிரஜ்வல் ரேவண்ணாவின் சிறை வாழ்க்கை

பிங்க் பியூட்டி... ஐஸ்வர்யா ராஜேஷ்!

நீதிமன்றம் கண்டனம்: இது கட்சிகளின் ஜனநாயக உரிமை! - ராகுலுக்கு இந்தியா கூட்டணி ஆதரவு

ஒருவர் மட்டுமே வாழும் சிவகங்கை நாட்டாகுடி கிராமம்! காரணம் என்ன?

SCROLL FOR NEXT