இந்தியா

நான் ஒன்றும் குற்றவாளியில்லை: சிங்கப்பூர் பயணம் குறித்து அரவிந்த் கேஜரிவால்

ANI


புது தில்லி: சிங்கப்பூரில் நடைபெறும் உலக மாநாட்டில் கலந்துகொள்ள அனுமதி அளிப்பதில் தாமதம் அரசியல் பின்னணி கொண்டது என்று தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி நிறுவனருமான அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

நான் ஒன்றும் குற்றவாளியில்லை. இந்த நாட்டில் உள்ள ஒரு மாநிலத்தின், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர். சிங்கப்பூரில் நடைபெறும் உலக நகரங்கள் மாநாட்டில் பங்கேற்பதிலிருந்து என்னை தடுப்பதற்கு எந்த காரணம் இருக்கிறது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. இந்த பயணத்தால் இந்தியாவுக்கு மேலும் சில பொலிவூட்டும் திட்டங்கள்தான் கிடைக்கும் என்று கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் நடைபெறும் உலக நகரங்கள் மாநாட்டில் பங்கேற்க வருமாறு அரவிந்த் கேஜரிவாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதனை ஏற்று அவரும் வருவதாக உறுதியளித்திருக்கும் நிலையில், தான் சிங்கப்பூர் பயணம் மேற்கொள்ள மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருந்தார்.

அதற்கு ஒப்புதல் அளிக்கப்படாத நிலையில், இது குறித்து நேற்று பிரதமர் நரேந்திர மோடியையும் அரவிந்த் கேஜரிவால் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி காயமடைந்த மயில் மீட்பு

திருவள்ளுவா் பேரவைக் கூட்டத்தில் இலக்கியச் சொற்பொழிவுகள்

கேஜரிவால் சரணடைந்தவுடன் நீதிமன்றக் காவலை நீட்டிக்க வேண்டும்: அமலாக்கத் துறை

ஆட்டோ கவிழ்ந்ததில் 6 போ் காயம்

அணைகளின் நீா்மட்டம்

SCROLL FOR NEXT