இந்தியா

பாகிஸ்தானில் படகு விபத்து: பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு!

பாகிஸ்தானில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. 

IANS



பாகிஸ்தானில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. 

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சாதிகாபாத் நகரின் மச்கா பகுதிக்கு அருகே இன்தோஸ் ஆற்றில் பயணிகள் படகு கவிழ்ந்துள்ளது. 

மச்காவில் உள்ள ஹுசைன் பகாஷ் சோலங்கி கிராமத்திற்கு திருமண விழாவிற்குச் சென்று திரும்பும்போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த படகில் 100 பேர் வரை பயணித்துள்ளனர். அதில் 19 பெண்கள், 2 குழந்தைகள் உள்பட 21 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. 

அதிக அளவிலான மக்கள் படகில் ஏற்றியதும், நீரின் ஓட்டம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களே படகு கவிழ்ந்ததற்கு முக்கிய காரணம் என்று உள்ளூர் மற்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

மேலும், காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. 

படகு விபத்து குறித்து அந்நாட்டுப் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாடகர் ஸுபீன் கர்கின் மேலாளர், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கைது!

வர்த்தக சிலிண்டர் விலை உயர்வு!

பிலிப்பின்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! 27 பேர் பலி!

அனுகூலம் ஏற்படும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

திருவண்ணாமலைக்கு வந்த ஆந்திர பெண் பாலியல் பலாத்காரம்: காவலா்கள் இருவா் கைது

SCROLL FOR NEXT