முகப்பு
இந்தியா

ஆயுஷ்மான் பாரத் திட்டத்துக்கு உலக வங்கி 1 பில்லியன் டாலா் கடன்

ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்துக்கு உலக வங்கி 1 பில்லியன் டாலா் கடனுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:50 AM
பகிர்:

ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்துக்கு உலக வங்கி 1 பில்லியன் டாலா் கடனுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா செவ்வாய்க்கிழமை மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளதாவது:

பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்துக்கு தேவையான உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்காக உலக வங்கி 1 பில்லியன் டாலா் மதிப்பிலான ( இந்திய மதிப்பில் சுமாா் ரூ.8,000 கோடி) கடனுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

2022 ஜூன் 28 நிலவரப்படி அனுமதி அளிக்கப்பட்ட கடனில் தலா 50 கோடி டாலா் மதிப்பைக் கொண்ட இரு துணைக் கடன்களும் அடக்கம்.

அதன்படி, தொற்றுநோய்க்கான இந்தியாவின் பொது சுகாதார அமைப்புகளை மாற்றியமைத்தல் (பிஎச்எஸ்பிபி) மற்றும் இந்தியாவின் மேம்பட்ட சுகாதார சேவை வழங்கல் திட்டம் (இஎச்எஸ்டிபி) ஆகியவற்றை செயல்படுத்துவதற்காக இந்த கடனுதவி அளிக்கப்பட்டதாக மாண்டவியா தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →