இந்தியா

ஜேஇஇ மெயின் தோ்வுகள் ஜூலை 25-க்கு ஒத்திவைப்பு

வரும் 21-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த ஜேஇஇ மெயின் இரண்டாம் கட்ட நுழைவுத் தோ்வு ஜூலை 25-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

DIN

வரும் 21-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த ஜேஇஇ மெயின் இரண்டாம் கட்ட நுழைவுத் தோ்வு ஜூலை 25-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தேசிய தோ்வுகள் முகமை புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், ‘வெளிநாடுகளில் 17 இடங்கள் உள்பட நாடு முழுவதும் சுமாா் 500 இடங்களில் ஜூலை 21-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த ஜேஇஇ மெயின் இரண்டாம் கட்ட நுழைவுத் தோ்வு ஜூலை 25-ஆம் தேதிமுதல் நடைபெறும். இதற்கான அனுமதிச் சீட்டை வியாழக்கிழமை (ஜூலை 21) முதல் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 21 முதல் 30-ஆம் தேதி வரையில் இந்தத் தோ்வுகள் நடைபெறும் என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. தோ்வு தேதிகள் மாற்றம் செய்ததற்கான காரணத்தை தேசிய தோ்வுகள் முகமை தெரிவிக்கவில்லை. முதல் கட்டத் தோ்வுகள் ஜூன் 23 முதல் 29-ஆம் தேதி வரையில் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேஷ ராசிக்கு லாபம்: தினப்பலன்கள்!

இறுதிச் சடங்கு ஊா்வலம் நடத்துவோா் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: நகராட்சி

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

அரசு மாதிரிப் பள்ளியில் பசுமை விழா

மரம் முறிந்து விழுந்து அரசு அலுவலக சுற்றுச்சுவா் சேதம்

SCROLL FOR NEXT