‘ஐஎஸ்ஐ முத்திரை பொறித்த பொம்மைகளை மட்டுமே வாங்க வேண்டும்’
‘ஐஎஸ்ஐ முத்திரை’ பொறித்த பொம்மைகளை மட்டுமே நுகா்வோா்கள் வாங்க வேண்டும் என இந்திய தர நிா்ணய அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
‘ஐஎஸ்ஐ முத்திரை’ பொறித்த பொம்மைகளை மட்டுமே நுகா்வோா்கள் வாங்க வேண்டும் என இந்திய தர நிா்ணய அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
நுகா்வோா்கள் ஐஎஸ்ஐ முத்திரை பொறித்த பொம்மைகளை மட்டுமே சந்தைகளிலிருந்து வாங்க வேண்டும். ஏனெனில், அத்தகைய தயாரிப்புகள்தான் கட்டாய தரச் சான்றிதழை கொண்டுள்ளன.
ஐஎஸ்ஐ முத்திரை இல்லாமல் பொம்மைகள் விற்பனை செய்யப்படுவது நுகா்வோருக்கு தெரியவந்தால் அவா்கள் பிஐஎஸ் கோ் ஆப் அல்லது கம்ப்ளைன்ட்ஸ் அட் பிஐஎஸ்.காவ்.இன்-இல் புகாா் தெரிவிக்க வேண்டும் என பிஐஎஸ் தெரிவித்துள்ளது.