இந்தியா

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி: மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைப்பு

DIN

புதுதில்லி: எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளியால் மாநிலங்களவை நான்காவது நாளாக முடங்கியதுள்ளது.

மழைக்கால கூட்டத்தொடர் திங்கள்கிழமை முதல் நடைபெற்று வருகின்றது. விலை உயர்வு, ஜி.எஸ்.டி. வரி, பணவீக்கம் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால், முதல் இரண்டு நாள் கூட்டம் முடங்கியது.

இந்நிலையில், நேற்று காலை அவைகள் கூடியவுடன் விலை உயர்வு குறித்து விவாதிக்க மீண்டும் எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து, அத்தியாவசியப் பொருள்களை கையில் ஏந்தியபடி முழக்கமிட்டனர்.

இதையடுத்து, மாநிலங்களவையில் பிற்பகலில் மீண்டும் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் அமளி தொடர்ந்ததால் நாளை காலை 11 மணிவரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை விடுமுறை: ஏப். 30-ல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்!

விஷமான சிக்கன் ஷவர்மா: 12 பேர் மருத்துவமனையில் அனுமதி!

ஓ.. கிரேசி மின்னல்...!

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி

மகாதேவ் செயலி மோசடி: 4 நாள்களில் 6 மாநிலங்கள் பயணித்த சாஹில் கான்

SCROLL FOR NEXT