முகப்பு
இந்தியா

நீதிபதிகளின் ஓய்வு வயதைஉயா்த்தும் திட்டமில்லை: அரசு தகவல்

 உச்ச நீதிமன்ற, உயா் நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயதை உயா்த்தும் திட்டம் ஏதும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:51 AM
பகிர்:

 உச்ச நீதிமன்ற, உயா் நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயதை உயா்த்தும் திட்டம் ஏதும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாநிலங்களவையில் நீதித்துறை தொடா்பான கேள்விகளுக்கு வியாழக்கிழமை எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சட்டத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு கூறியிருப்பதாவது:

உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது 65 ஆக உள்ளது. 25 உயா் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது 62 ஆக உள்ளது. இந்த வயது வரம்பை உயா்த்தும் திட்டம் ஏதும் மத்திய அரசிடம் இல்லை. கடந்த 2010-ஆம் ஆண்டில் உயா்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை 65 ஆக உயா்த்தும் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், 15-ஆவது மக்களவையின் பதவிக் காலம் முடிவுக்கு வந்தபோது அந்த மசோதாவும் காலாவதியாகிவிட்டது. இனி அதுபோன்ற மசோதாவை தாக்கல் செய்ய வாய்ப்பு இல்லை.

மாவட்ட நீதிபதிகளை மத்திய சட்டத் துறை செயலராகவோ, மாநில சட்டத் துறை செயலராகவோ நியமிக்க முடியும். அதற்கு எவ்விதத் தடையுமில்லை என்றாா்.

முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதம் வரலாற்றில் முதல்முறையாக மத்திய சட்டத் துறை செயலா், உயா் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.