இந்தியா

உலகின் 4-வது பெரிய பணக்காரர் அதானி! பில்கேட்ஸைப் பின்தள்ளினார்

DIN

உலக பணக்காரர்களின் பட்டியலில் பிட்கேஸைப் பின்னுக்குத் தள்ளி 4-வது  இடத்தைப் பிடித்தார் அதானி.

அதானி குழுமத்தின் நிறுவனர் கௌதம் அதானி உலகளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் தொழிலதிபர். உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இருப்பவர்.

இந்நிலையில், ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட உலக பணக்காரர்கள் பட்டியலில் கௌதம் அதானி 115 பில்லியன் டாலர் (ரூ. 9.2 லட்சம் கோடி) சொத்து மதிப்புடன் 4-வது இடம் பிடித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 100 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு கொண்டவர்கள் பட்டியலில் இடம்பிடித்திருந்த நிலையில் தற்போது உலக செல்வந்தர்களில் ஒருவராகவும் மாறியுள்ளார். 

உலக செந்தவர்கள் பட்டியலில் எலான் மஸ்க் (ரூ. 18 லட்சம் கோடி) முதலிடத்திலும் எல்விஎம்எச் நிர்வாக இயக்குநர் பெர்னார்ட் அர்னால்ட் (12.5 லட்சம் கோடி) 2-வது மற்றும் அமேசான் நிறுவனர் ஜெஃப் ஃபேசோஸ் (ரூ. 11.4 லட்சம் கோடி) 3-வது இடத்திலும் உள்ளனர்.

மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் 101.4 பில்லியன் (ரூ. 8.4 லட்சம் கோடி) சொத்து மதிப்பில் 5-வது இடத்தில் உள்ளார்.

ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி 10 இடத்தைத் தக்க வைத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT