முகப்பு
இந்தியா

கேரளத்தில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் உறுதியானது!

கேரளத்தில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

Updated On : 22 ஜூலை, 2022 at 10:34 AM
பகிர்:

கேரளத்தில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கனியாரம் பகுதியில் கடந்த வாரம் 5 பன்றிகள் இறந்தன. இதனால் பன்றிகளின் மாதிரிகள் போபாலில் உள்ள ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் உறுதியாகியுள்ளது. 

இதையடுத்து, மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Advertisement

முன்னதாக, கடந்த வாரம் அசாம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் உறுதியானது குறிப்பிடத்தக்கது. 

இது மனிதர்களிடம் பரவாது என்றாலும், தொற்றுள்ள பன்றியிலிருந்து மனிதர்கள் மூலமாக மற்ற விலங்குகளுக்கு பரவும். 1920ல் ஆப்பிரிக்காவில் முதன்முதலில் இந்த தொற்று கண்டறியப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.