ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் மோசமான வானிலை காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராம்பன் மாவட்டத்தில் பல இடங்களில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகள் மற்றும் கற்கள் காரணமாக மூடப்பட்ட பின்னர் வியாழன் இரவு, நெடுஞ்சாலை ஒருவழிப் போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நெடுஞ்சாலையில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக ஜம்முவில் அமர்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாம்: ஹைதராபாத்தில் ஐஐஐடிஎம் மாணவி தற்கொலை: காரணம்?
43 நாள் நடைபெறும் அமர்நாத் யாத்திரை ஜூன் 3 அன்று பஹல்காமில் உள்ள நுன்வான் மற்றும் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பால்தால் முகாமிலிருந்து பக்தர்கள் அமர்நாத் குகைக் கோயிலுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
இதுவரை 2.30 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் பனி சிவலிங்கத்தைத் தரிசனம் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரக்ஷா பந்தன் விழாவையொட்டி ஆகஸ்ட் 11ஆம் தேதி யாத்திரை முடிவடைகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.