முகப்பு
இந்தியா

சிக்கிமில் அதிகரிக்கும் கரோனா

சிக்கிம் மாநிலத்தில் புதிதாக 276 பேருக்கு இன்று (ஜூலை 22) கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

Updated On : 22 ஜூலை, 2022 at 3:54 PM
பகிர்:

சிக்கிம் மாநிலத்தில் புதிதாக 276 பேருக்கு இன்று (ஜூலை 22) கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் ஒருவர் கரோனாவால் உயிரிழந்துள்ளார். 

சிக்கிம் மாநிலத்தில் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 40,923 ஆக அதிகரித்துள்ளது. அதே போல மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 466 ஆக உள்ளது. நேற்று (ஜூலை 21) நாளில் 214 பேர் புதிதாக கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (ஜூலை 22) அந்த எண்ணிக்கை 276 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவினால் பாதிக்கப்பட்டு 1,150 சிகிச்சை பெற்று வருகின்றனர். 38, 534 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.