திரௌபதி முர்மு 
இந்தியா

ஜூலை 25-ல் பதவியேற்கிறார் திரௌபதி முர்மு

குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றிபெற்ற திரௌபதி முர்மு வருகிற ஜூலை 25 ஆம் தேதி பதவியேற்கிறார்.

DIN

குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றிபெற்ற திரௌபதி முர்மு வருகிற ஜூலை 25 ஆம் தேதி பதவியேற்கிறார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் மொத்தம் பதிவான 4754 வாக்குகளில் 53 வாக்குகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டது. 4701 வாக்குகள் வாக்கு எண்ணிக்கைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. மொத்த வாக்குகளின் 2824 வாக்குகள் பெற்று திரெளபதி முர்மு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். 

இதன்மூலம் திரெளபதி முர்மு நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராகியுள்ளார். திரெளபதி முர்மு குடியரசுத் தலைவராகியுள்ளதன் மூலம் நாட்டின் முதல் பழங்குடி பெண் குடியரசுத் தலைவர் எனும் பெருமையை அவர் பெறுகிறார். 

திரௌபதி முர்முவின் வெற்றிக்கு தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி  உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வரிசையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி,  எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், திரௌபதி முர்மு குடியரசுத் தலைவராக வருகிற ஜூலை 25 ஆம் தேதி பதவியேற்க உள்ளார். நாடாளுமன்றத்தில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எந்த வருத்தமும் இல்லை! தலைமை நீதிபதியைத் தாக்க முயற்சித்த வழக்குரைஞர் கருத்து!

ரூ.90 ஆயிரத்தை நெருங்கிய தங்கம் விலை! கலக்கத்தில் நடுத்தர வர்க்கம்!

மழைநீர் வடிகால் சீரமைப்புப் பணிகள்! நள்ளிரவில் உதயநிதி ஆய்வு!

இந்தியாவுக்கு எதிரான ஓடிஐ, டி20 தொடர்: ஆஸி. அணியில் மேக்ஸ்வெல், கம்மின்ஸுக்கு இடமில்லை!

ராமதாஸை சந்தித்து நலம்விசாரித்தார் நயினார் நாகேந்திரன்!

SCROLL FOR NEXT