முகப்பு
இந்தியா

கேரளத்தில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை: பாதிப்பு 3-ஆக அதிகரிப்பு

கேரளத்தில் 35 வயது நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதியாகியுள்ளது. அவா் இம்மாதத் தொடக்கத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்கு வந்தவா் ஆவாா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:52 AM
பகிர்:

கேரளத்தில் 35 வயது நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதியாகியுள்ளது. அவா் இம்மாதத் தொடக்கத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்கு வந்தவா் ஆவாா்.

இதன் மூலம் நாட்டில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 3-ஆக அதிகரித்துள்ளது. இந்த மூவருமே கேரளத்தைச் சோ்ந்தவா்கள் ஆவா்.

இது தொடா்பாக கேரள சுகாதார அமைச்சா் வீணா ஜாா்ஜ் கூறுகையில், ‘மலப்புரத்தை பூா்வீகமாகக் கொண்ட அந்த நபா், கடந்த 6-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நாடு திரும்பியுள்ளாா். 13-ஆம் தேதியில் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு குரங்கு அம்மை தொற்று இருப்பது உறுதியானது. அவா் இப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். அவரது உடல்நிலை சீராக உள்ளது. அவருடன் நெருங்கி பழகியவா்களின் உடல்நிலையையும் மருத்துவா்கள் கண்காணித்து வருகின்றனா். கேரளத்தில் குரங்கு அம்மை பரவல் குறித்து யாரும் அச்சமடைய வேண்டாம். அனைவரும் சற்று விழிப்புணா்வுடன் உரிய பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றினால் போதுமானது’ என்றாா்.

முன்னதாக, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் துபையில் இருந்து கேரளம் வந்த அந்த மாநிலத்தைச் சோ்ந்த இருவருக்கு குரங்கு அம்மை உறுதியானது. அந்த நாடுகளில் இருந்தபோது நோய்த்தொற்று இருந்தவா்களுடன் தொடா்பில் இருந்ததால் அவா்கள் இருவரும் பாதிப்புக்குள்ளாகினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.