இந்தியா

எதிர்க்கட்சிகள் அமளி: அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

DIN

புதுதில்லி: நாடளுமன்றத்தை நடத்திச் செல்வது குறித்து முக்கிய அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.

எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வரும் நிலையில், நாடளுமன்றத்தை நடத்திச் செல்வது குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை உயர்மட்ட அமைச்சர்களுடன் ஆலோசனை வருகிறார்.

ராஜ்நாத் சிங், அமித் ஷா, பிரகலாத் ஜோஷி, அனுராக் சிங் தாக்கூர், கிரண் ரிஜ்ஜு, பியூஷ் கோயல் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

மழைக்கால கூட்டத்தொடர் திங்கள்கிழமை முதல் நடைபெற்று வருகின்றது. விலை உயர்வு, ஜி.எஸ்.டி. வரி, பணவீக்கம் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால், முதல் இரண்டு நாள் கூட்டம் முடங்கியது.

மழைக்கால கூட்டத்தொடரின் ஐந்தாவது நாளான இன்று மக்களவை மற்றும் மாநிலங்களை காலை 11 மணிக்கு மீண்டும் தொடங்கியது. மழைக்கால கூட்டத்தொடரில்  இரு அவைகளும் தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஒத்திவைக்கப்பட்டது.

ஜிஎஸ்டி வரி உயர்வு, பணவீக்கம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் எம்பிக்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் இன்று மீண்டும் நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நடைபெறும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT