குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவடைய ஒருநாள் உள்ள நிலையில், அவருக்கு பிரிவு உபச்சார விழா சனிக்கிழமை நடைபெற்றது.
நாட்டின் 14ஆவது குடியரசுத் தலைவராக பணியாற்றிய ராம்நாத் கோவிந்த்தின் பதவிக்காலம் நாளையுடன் நிறைவடைய உள்ளது. அதனைத் தொடர்ந்து அவருக்கு பிரிவு உபச்சார நிகழ்ச்சி நாடாளுமன்ற மைய மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை உறுப்பினர் ஓம் பிர்லா, துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரியாவிடை அளித்தனர்.
இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் ராம்நாத் கோவிந்திடம் நினைவு சின்னத்தை மக்களவை தலைவர் ஓம் பிர்லா வழங்கினார்.
இதையும் படிக்க | மகள்கள் என்றாலே கடன்சுமை அல்ல: உச்ச நீதிமன்றம்
இந்தியாவின் 15ஆவது குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரௌபதி மும்மு திங்கள்கிழமை பதவியேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.