கோப்புப் படம் 
இந்தியா

நாட்டில் புதிதாக 20,279 பேருக்கு கரோனா; 36 பேர் பலி

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20,279 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளில் மட்டும் 49 பேர் உயிரிழந்தனர். 

DIN


நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20,279 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளில் மட்டும் 49 பேர் உயிரிழந்தனர். 

நேற்று (சனிக்கிழமை) தொற்று பாதிப்பு எண்ணிக்கை 21,411 ஆக இருந்தது. நேற்று முன் தினம் 21,880ஆக இருந்தது.

இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று (ஜூலை 24) வெளியிட்ட அறிக்கையில், ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 20,279 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,38,88,755 ஆக அதிகரித்துள்ளது. 

கடந்த ஒரு நாளில் 36 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,26,033ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 18,143 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவோர் எண்ணிக்கை 1,52,200ஆக அதிகரித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரவி மோகன் இயக்கும் முதல் படம்: புரோமோ தேதி அறிவிப்பு!

ரூ. 30,000 கோடி சொத்தில் பங்கு வேண்டும்: கரிஷ்மா கபூரின் வாரிசுகள் வழக்கு!

சினிமா காதலி... த்ரிஷா!

சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி: குடியரசு துணைத் தலைவராகிறார்!

படப்பிடிப்புக்கு முன்பே 70% பின்னணி இசையை முடித்த ஸ்பிரிட் படக்குழு!

SCROLL FOR NEXT