இந்தியா

குடியரசுத் தலைவர் மாளிகையில் திரௌபதி முர்மு

DIN

குடியரசுத் தலைவராக பதவியேற்க உள்ள திரௌபதி முர்மு தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்றார்.

நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராக திரௌபதி முா்மு இன்று பதவியேற்கிறாா். பதவியேற்பு நிகழ்ச்சி நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெறவுள்ளது. திரௌபதி முா்முவுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப் பிரமாணம் செய்து வைப்பாா். அதைத் தொடா்ந்து 21 குண்டுகள் முழங்க புதிய குடியரசுத் தலைவருக்கு மரியாதை அளிக்கப்படும். பின்னா் திரௌபதி முா்மு உரையாற்றுவாா்.

நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான எம்.வெங்கையா நாயுடு, பிரதமா் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவா் ஓம்
பிா்லா, மத்திய அமைச்சா்கள், ஆளுநா்கள், மாநில முதல்வா்கள், முப்படை தலைமை தளபதிகள்-மூத்த தளபதிகள், பிற துறை தலைவா்கள், நாடாளுமன்ற
உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா். 

இந்த நிலையில் குடியரசுத் தலைவராக பதவியேற்க உள்ள திரௌபதி முர்மு தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்றார். குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்ற திரௌபதி முர்முவை ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவி சவிதா ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். முன்னதாக திரௌபதி முர்மு தில்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் இன்று காலை மரியாதை செலுத்தினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

இந்தியன் - 2 இசைவெளியீட்டு விழா எப்போது?

4-வது இடத்தில் சிறப்பாக செயல்படும் ஜடேஜா: சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர்

SCROLL FOR NEXT