இந்தியா

கடந்த 3 ஆண்டுகளில் 329 புலிகள் உயிரிழப்பு: மத்திய அரசு

DIN

இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் 329 புலிகள் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மக்களவையில் மத்திய சுற்றுச்சூழல் இணையமைச்சர் அஸ்வினி குமார் சௌபே இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் 329 புலிகள் உயிரிழந்ததாக அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்தார்.

அதில், 2019 ஆம் ஆண்டு 96 புலிகளும், 2020-ல் 106 புலிகளும் , 2021-ல் 127 புலிகளும் உயிரிழந்துள்ளன என்றும் இயற்கை காரணங்களால் 69 புலிகளும், இயற்கைக்கு மாறான விதத்தில் 5 புலிகளும், வேட்டையாடப்பட்டு 29 புலிகளும், 30 புலிகள் மற்ற காரணங்களால் உயிரிழந்ததாகவும் மீதமுள்ள 197 புலிகளின் மரணம் தொடர்பாக ஆய்வு நடைபெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கியமாக, 2019 ஆம் ஆண்டை விட 2021-ல் புலிகள் வேட்டையாடப்பட்டது குறைந்துள்ளது என்றும் 125 பேர் புலிகளால் கொல்லப்பட்டனர் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும்,  கடந்த 3 ஆண்டுகளில் நாடு முழுவதும் 307 யானைகள் மின்சாரம், ரயில் விபத்து, உடல்நலக் குறைவு, வேட்டையாடுதல் ஆகிய காரணங்களால் உயிரிழந்தள்ளன.

அவற்றில் 222 யானைகள் மின்சாரம் தாக்கியதில் பலியானவை என்றும் அதில் ஒடிசாவில் 41, தமிழகம் 34 மற்றும் அசாமில் 33 யானைகள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

SCROLL FOR NEXT