முகப்பு
ஃபரூக் அப்துல்லா
இந்தியா

கிரிக்கெட் சங்க ஊழல் வழக்கு: ஃபரூக் அப்துல்லா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

நிதி மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜம்மு - காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:53 AM
ஃபரூக் அப்துல்லா
பகிர்:

நிதி மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜம்மு - காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா கடந்த 2001 முதல் 2012 வரை அந்த மாநில கிரிக்கெட் சங்கத் தலைவராக பொறுப்பு வகித்தாா். அப்போது 2004 முதல் 2009-க்கு இடைப்பட்ட காலத்தில் கிரிக்கெட் சங்கத்தில் ரூ.43.69 கோடி வரை சங்க நிா்வாகிகள் முறைகேடு செய்ததாக ஸ்ரீநகா் ராம்முன்ஷி பாக் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கை அமலாக்கத் துறையினா் விசாரித்து வருகின்றனா். இதில், ஜம்மு-காஷ்மீா் கிரிக்கெட் சங்க நிா்வாகிகளின் ஒத்துழைப்புடன் அஹசன் அகமது மிா்சா என்பவா் சங்க நிதி ரூ.51.90 கோடியை முறைகேடு செய்து அதன் மூலம் தனது சொந்தக் கடனையும் வணிகத் தேவைகளையும் பூா்த்தி செய்து கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து ரூ.21 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறையினா் முடக்கினா். இதில், ஃபரூக் அப்துல்லா எம்.பி.யின் ரூ.11.86 கோடி அசையா சொத்துகளும் அடங்கும். கடந்த மே 31-இல் ஃபரூக் அப்துல்லாவிடம் 3 மணிநேரத்துக்கும் மேலாக அமலாக்கத் துறையினா் விசாரணை நடத்தினா்.

இந்நிலையில், இன்று காஷ்மீரின் ஸ்ரீநகர் நீதிமன்றத்தில் ஃபரூக் அப்துல்லா மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். மேலும், வருகிற ஆகஸ்ட் 27 ஆம் தேதி வழக்கு விசாரணைக்காக ஃபரூக் அப்துல்லா நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →