இந்தியா

கோவாவில் அடுத்த 2 மாதங்களில் 10.5 லட்சம் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த இலக்கு

IANS

கோவாவில் அடுத்த இரண்டு மாதங்களில் 10.5 லட்சம் கரோனா முன்னெச்சரிக்கை தடுப்பூசியை செலுத்த இலக்கு நிர்ணயித்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக சுகாதார அமைச்சர் விஸ்வஜித் ரானே கூறுகையில், 

மாநிலத்தில் இதுவரை 79,655 பேர் மட்டுமே முன்னெச்சரிக்கை தடுப்பூசியை செலுத்தியுள்ளனர். மக்கள் முன்வந்து பூஸ்டர் தடுப்பூசியை எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மாநிலத்தில் பூஸ்டர் தடுப்பூசி அளவை சுகாதார அமைச்சகம் கண்காணித்து வருகிறது. மாநிலம் முழுவதும் 10.50 லட்சத்திற்கு தடுப்பூசி வழங்குவதே எங்கள் இலக்கு என்று அவர் கூறினார். 

18 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள் 33,772 பேர் முன்னெச்சரிக்கை தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். அதே நேரத்தில் 60 வயதுக்கு மேட்றபட்ட 45,883 பேர் தடுப்பூசியை செலுத்தியுள்ளனர். 

செப்டம்பர் 30-க்குள் நாம் இலக்கை முடிக்க வேண்டும். இதற்காக விழிப்புணர்வு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

வடகிழக்கு தில்லி: வெற்றியைத் தீா்மானிக்கும் பூா்வாஞ்சலிகள்!

தில்லி பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி, காங்கிரஸ் பிரமுகா்கள்!

தில்லியில் 2,800 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: மொத்தம் 1.52 கோடி வாக்காளா்கள்

அச்சிடுவோரின் முகவரி இல்லாத அரசியல் விளம்பர பலகைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

SCROLL FOR NEXT