இந்தியா

'உண்மை' மட்டுமே இந்த சர்வாதிகாரத்தை முடிவுக்குக் கொண்டுவரும்: ராகுல் காந்தி ட்வீட்

'உண்மை' மட்டுமே இந்த சர்வாதிகாரத்தை முடிவுக்குக் கொண்டுவரும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

DIN

'உண்மை' மட்டுமே இந்த சர்வாதிகாரத்தை முடிவுக்குக் கொண்டுவரும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'சர்வாதிகாரத்தைப் பாருங்கள். இங்கு அமைதியான ஆர்ப்பாட்டங்களை நடத்த முடியாது, பணவீக்கம் மற்றும் வேலையின்மை பற்றி விவாதிக்க முடியாது.

காவல்துறையையும், புலனாய்வு அமைப்புகளையும் தவறாகப் பயன்படுத்தி, எங்களைக் கைது செய்தாலும், ஒருபோதும் எங்களை அமைதிப்படுத்த முடியாது.

'உண்மை' மட்டுமே இந்த சர்வாதிகாரத்தை முடிவுக்குக் கொண்டுவரும்' என்று பதிவிட்டுள்ளார். 

முன்னதாக, சோனியா காந்தி மீதான அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தில்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையில் இருந்து விஜய் சவுக் வரை ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்று காலை பேரணியில் ஈடுபட்டனர். அப்போது, ராகுல் காந்தி உள்ளிட்ட 50 எம்.பி.க்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். 

நேஷனல் ஹெரால்டு பத்திரிகையில் சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தொடர்பான வழக்கில், காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி அமலாக்கத் துறை முன்பாக இன்று இரண்டாவது நாளாக ஆஜராகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாயும் ஒளி நீ... ராஷி சிங்!

உக்ரைனில் 800 ட்ரோன்கள் ஏவி ரஷியா தீவிர தாக்குதல்..!

காதல் இதயம்... தாரணி ஹெப்சிபா!

பொம்மைகளும், அதன் பாரம்பரியமும்...

'பளிச்' சருமத்துக்கு ஹைட்ரா பேஷியல்!

SCROLL FOR NEXT