இந்தியா

அமலாக்கத்துறையில் 3-வது நாளாக சோனியா காந்தி ஆஜர்

நேஷனல் ஹெரால்டு நிதி முறைகேடு வழக்கு விசாரணைக்காக, காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, அமலாக்கத் துறையிடம் மூன்றாவது நாளாக இன்று ஆஜரானாா்.

DIN

நேஷனல் ஹெரால்டு நிதி முறைகேடு வழக்கு விசாரணைக்காக, காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, அமலாக்கத் துறையிடம் மூன்றாவது நாளாக இன்று ஆஜரானாா்.

தில்லியில் உள்ள அமலாக்கத் துறை தலைமை அலுவலகத்திற்கு காலை 11 மணிக்கு காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தியுடன் வந்தார். பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் சோனியா காந்தி செல்லும் சாலையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

ஏற்கெனவே, இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஜூலை 21ஆம் தேதி 2 மணிநேரமும், நேற்று 6 மணிநேரமும் சோனியா காந்தியிடம் விசாரணை நடத்தப்பட்டது.

சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் இயக்குநா்களாக உள்ள ‘யங் இந்தியா’ நிறுவனம், ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகையை வெளியிடும் அசோசியேட்டட் ஜா்னல்ஸ் நிறுவனத்தை கடந்த 2010-ஆம் ஆண்டு கையகப்படுத்தியது. இதில் மிகப்பெரிய அளவில் பண மோசடி நடைபெற்றுள்ளதாகக் கூறி பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடா்ந்தாா். இந்தப் பண மோசடி தொடா்பாக அமலாக்கத் துறை தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 2 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25% உடனடி வரி: அதிபர் டிரம்ப் உத்தரவு!

காரைக்காலில் தொடர் மழை: பள்ளிகளுக்கு விடுமுறை!

அயலகத் தமிழா் மாநாட்டில் 4 ஒப்பந்தங்கள்

மணப்பாறையில் மயில்களை வேட்டையாடிய 5 போ் கைது

SCROLL FOR NEXT