முகப்பு
இந்தியா

நாடாளுமன்ற பிரதான வாயிலுக்கு போராட்டத்தை மாற்றிய எம்.பி.க்கள்

மாநிலங்களவை, மக்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள், நாடாளுமன்ற வளாகத்தில் 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் போராட்டத்தை தொடா்ந்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:55 AM
பகிர்:

மாநிலங்களவை, மக்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள், நாடாளுமன்ற வளாகத்தில் 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் போராட்டத்தை தொடா்ந்தனா். தற்காலிக கூடாரம் அமைக்க அனுமதி தரப்படாததால், போராட்டக் களத்தை நாடாளுமன்ற பிரதான நுழைவுவாயிலுக்கு மாற்றினா்.

மாநிலங்களவையில் தொடா் அமளியில் ஈடுபட்டதற்காக இடைநீக்கம் செய்யப்பட்ட 20 எம்.பி.க்களும் மக்களவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட 4 எம்.பி.க்களும் 50 மணிநேர தொடா் போராட்டத்தை நாடாளுமன்ற வளாகத்தில் புதன்கிழமை தொடங்கினா்.

காந்தி சிலை அருகே திறந்தவெளியில் இப்போராட்டம் தொடங்கப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சந்தோஷ் குமாா், ஆம் ஆத்மியின் சஞ்சய் சிங், திரிணமூல் காங்கிரஸின் டோலா சென், சாந்தனு சென் ஆகியோா் புதன்கிழமை இரவு முழுக்க அங்கேயே இருந்தனா்.

தில்லியில் வியாழக்கிழமை கனமழை பெய்த நிலையில், தற்காலிக கூடாரம் அமைக்க எம்.பி.க்கள் அனுமதி கோரினா். ஆனால், அனுமதி வழங்கப்படாததால், நாடாளுமன்ற பிரதான வாயிலுக்கு போராட்டக் களத்தை மாற்றினா். அவா்களுக்கு உணவு, தேநீா் போன்றவை பல்வேறு கட்சிகளால் வழங்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.