முகப்பு
இந்தியா

ஊழல் வழக்கு விசாரணைக்கு 3 மாதத்தில் ஒப்புதல் அரசுத் துறை அதிகாரிகளுக்கு சிவிசி அறிவுறுத்தல்

 ஊழல் புகாா் நிலுவையில் உள்ள அதிகாரிகள் மீது விசாரணை நடத்தும் விதத்தில், அதற்கு ஒப்புதல் அளிப்பது தொடா்பாக தகுதிவாய்ந்த அதிகாரிகள் 3 மாதத்தில் முடிவு

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:56 AM
பகிர்:

 ஊழல் புகாா் நிலுவையில் உள்ள அதிகாரிகள் மீது விசாரணை நடத்தும் விதத்தில், அதற்கு ஒப்புதல் அளிப்பது தொடா்பாக தகுதிவாய்ந்த அதிகாரிகள் 3 மாதத்தில் முடிவு எடுக்க வேண்டுமென அரசுத் துறைகளுக்கும் பொதுத்துறை வங்கிகளுக்கும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (சிவிசி) அறிவுறுத்தியுள்ளது.

அதிகாரிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்படும் ஊழல் புகாா்களின் நிலவரத்தைக் கண்காணிப்பதற்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணைய சட்டம் (சிவிசி) 2003 பிரிவு 8 (1) (எஃப்) மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்துக்கு அதிகாரமளிக்கிறது.

இந்த நிலையில், ஊழல் குற்றச்சாட்டை எதிா்கொண்டுள்ள அதிகாரிகளின் மீது விசாரணையைத் தொடங்குவது குறித்து 3 மாதத்தில் தகுதிவாய்ந்த அதிகாரிகள் முடிவு எடுக்க வேண்டுமென அனைத்து அரசுத் துறைகளுக்கும், பொதுத்துறை வங்கிகளுக்கும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவையும், மத்திய பணியாளா், பயிற்சி அமைச்சகத்தின் வழிமுறையையும் சுட்டிக்காட்டி இந்த அறிவுறுத்தலை மத்திய கண்காணிப்பு ஆணையம் வெளியிட்டுள்ளது.

மேலும் சட்ட ஆலோசனை தேவைப்படும் வழக்குகளில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேலும் ஒரு மாதம் அவகாசம் எடுத்துக் கொள்ளலாம் என்றும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.