புது தில்லி: புகையிலை பொருள்கள் மீதான எச்சரிக்கை புகைப்படம் மற்றும் வாசகங்களை மாற்றியமைக்க மத்திய சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் வரும் டிசம்பர் 1ஆம் தேதிக்குப் பிறகு உற்பத்தி செய்யப்படும், இறக்குமதி அல்லது பொட்டலமிடப்படும் புகையிலைப் பொருள்கள் மீதான எச்சரிக்கை புகைப்படங்கள் மற்றும் புகையிலைப் பொருள்களால் வலிமிகுந்த மரணத்தைத் தழுவ நேரிடும் என்பது போன்ற வாசகங்களை மாற்றியமைக்க மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க.. அர்பிதா முகர்ஜி வீடா அல்லது அலி பாபா குகையா? வியக்கும் அதிகாரிகள்
டிசம்பர் 1ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் இந்த புதிய புகைப்படம் ஓராண்டு காலத்துக்கு நடைமுறையில் இருக்கும்.
2023ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதிக்குப் பிறகு உற்பத்தி அல்லது இறக்குமதி அல்லது பொட்டலமிடப்படும் புகையிலைப் பொருள்கள் மீது புதிய புகைப்படம் மற்றும் புகையிலையைப் பயன்படுத்துபவர்கள் இளமையிலேயே மரணத்தைத்தழுவுகிறார்கள் என்ற வாசகத்தையும் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.