இந்தியா

எளிதாக நீதி கிடைப்பது மிகவும் அவசியம்: பிரதமர் மோடி

PTI


புது தில்லி: நாட்டில் ஒரு வணிகத்தை நடத்துவதும் வாழ்வதும் எளிதாக இருக்க வேண்டியது எவ்வளவு முக்கியமோ அது போல நீதி கிடைப்பதும் எளிதாக இருக்க வேண்டியது அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

அனைத்திந்திய மாவட்ட சட்டச் சேவை அதிகாரிகளுக்கான முதல் கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, சுதந்திர நாட்டின் மிக அருமையான காலம் இது. அடுத்த 25 ஆண்டுகளில் நாடு மிகப்பெரிய முன்னேற்றங்களைக் காண்பதற்கான கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன. நாட்டில் வணிகம் மேற்கொள்வதும், மனிதன் வாழ்வதும் எளிதாக இருக்க வேண்டியது எவ்வளவு அவசியமோ அதுபோல நீதி கிடைப்பதும் எளிதாக இருக்க வேண்டியது முக்கியம் என்று கூறினார்.

மேலும் அவர் பேசுகையில், எந்தவொரு சமூகத்தைச் சேர்ந்தவரும் நீதித்துறையை அணுகுவது என்பது எளிதாக்கப்பட வேண்டும், அதை விட, அனைவருக்கும் சமமாக நீதி வழங்கப்பட வேண்டியது மிகவும் முக்கியம். இதற்கு, மிகவும் வலுவான சட்ட உள்கட்டமைப்புகளை உருவாக்க வேண்டியது அவசியம். நீதித் துறையின் உள்கட்டமைப்புகளை வலுவாக்க கடந்த எட்டு ஆண்டுகளில் நடவடிக்கைகள் துரிதகதியில் நடந்துள்ளன என்றும் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

குக் வித் கோமாளியிலிருந்து விலகிய பிரபலம்: இனி இவர்தான்!

45 வயதினிலே..

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

SCROLL FOR NEXT